31 பந்துகளில் சதம் விளாசிய ஏபி டி வில்லியர்ஸ் …! எப்போது தெரியுமா…?

ஏபி டிவில்லியர்ஸ் 2015 ஆம் ஆண்டு 40 நிமிடங்களில் 31 பந்துகளில் சதம் விளாசியுள்ளார்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் தற்பொழுது  கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருந்தாலும், அவரது சாதனைகள் தொடர்ந்து பேசப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. ஏபி டிவில்லியர்ஸ் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி அன்று வெறும் 31 பந்துகளில், 40 நிமிடங்களில் சதம் அடித்துள்ளார்.

8 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களை விளாசி வெறும் 31 பந்துகளில் சதமடித்து உலக சாதனை படைத்துள்ளார் ஏபி டிவில்லியர்ஸ். இவரது சாதனை இன்னும் யாராலும் முறியடிக்கப்படாமலே உள்ளது. இவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கோரி ஆண்டர்சன் அவர்கள் அதிவேக ஒருநாள் சதம் பட்டியலில் இரண்டாவதாக உள்ளார். இவர் 2014-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 36 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.

author avatar
Rebekal