அகலக்கால் வைத்து அகப்பட்டது பிரபல தயாரிப்பு நிறுவனம் !

பிரபல  இயக்குனர் ராமநாராயணன் தோற்றுவித்த ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம், தமிழ் சினிமாவுக்கே ஒரு வழிகாட்டியாக இருந்தது.

குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து போட்ட முதலீடுக்கு நஷ்டமில்லாமல், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள், தயாரிப்பாளர் என அனைவரும் லாபம் பார்க்கும் வகையில் படமெடுப்பதுதான் அவரது கொள்கையாக இருந்தது. அவரது படங்கள் அனைத்துமே ஒருசில லட்சங்களில் தயாரிக்கப்பட்டு கோடிகளில் பிசினஸ் ஆனவைஆனால் அவரது மறைவிற்கு பின் அவரது வாரிசுகள் வைத்த அகலக்கால் படங்களால் தற்போது இந்நிறுவனம் சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது.

சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்ட ‘சங்கமித்ரா’ திரைப்படத்திற்கு பல கோடிகள் செலவு செய்தும் இன்னும் படப்பிடிப்பு கூட தொடங்கவில்லை. மெர்சல் திரைப்படம் நன்றாக ஓடியும் தயாரிப்பாளர் கைக்கு லாபம் வந்து சேரவில்லை.மேலும் டிக் டிக் டிக் படத்தை வெளியிட முடிவு செய்து பின் விலகிவிட்டதும், இயக்குநர் சசி – ஜிவி பிரகாஷ் – சித்தார்த் கூட்டணியில் உருவாகவிருந்த ரெட்டைக்கொம்பு படம் மற்றும் சந்தானம் – எம்.ராஜேஷ் கூட்டணி படம், தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் படம் ஆகியவை டிராப் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் ராமநாராயணன் பாணியில் சின்ன பட்ஜெட் படத்தை தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment