3 மாத வாடகையின்றி உணவளித்து உதவிய காவல் அதிகாரி ரஞ்சித்குமார்!

தனது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த வடமாநில இளஞர்களிடம் 3 மாதமாக வாடகையும் வாங்காமல், இலவசமாக உணவளித்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பியுள்ள காவல் அதிகாரியின் செயல் பாராட்டை பெற்றுள்ளது. 

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஊர்படை காவல் அதிகாரியாக கடந்த 9 ஆண்டுகளாக வேலை செய்பவர் தான் ரஞ்சித்குமார். 

இவர் தனது வீட்டிலுள்ள 2 அறைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் 2 வருடங்களாக பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 பேர் வசித்து வந்துள்ளனர். எதிர்பாராத விதமாக போடப்பட்ட கொரோனா ஊரடங்கால் அவர்கள் வேலையின்றி உணவின்றி  இருந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக அவர்களிடம் வீட்டு வாடகையும் வாங்காமல், 3 மாதங்களாக உணவளித்து பராமரித்துள்ளார். இது குறித்து அவரிடம் கேட்ட பொழுது, தினக்கூலி செய்து பிழைக்கும் அவர்கள் உணவின்றி கஷ்டப்பட்டதால் என்னால் முடிந்ததை செய்தேன், தனியாக நான் செக்யூரிட்டி நிறுவனமும் நடத்தி வருவதால் உதவி செய்ய இலகுவாயிருந்தது, என் அம்மாவும் முடிந்தவரை சமைத்து தந்தார்கள் என கூறியுள்ளார். காவல் அதிகாரி ரஞ்சித்குமாரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

 

 

author avatar
Rebekal