130 நாட்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற நபர் குணமடைவு…!

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 130 நாட்கள் சிகிச்சை பெற்று தற்பொழுது குணமடைந்துள்ளார். 

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா பாதிப்பு உலகம் முழுவதிலும் பரவி வருகிறது. இதில் பல இளைஞர்கள், சிறுவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், முதியவர்கள் பலர் தங்கள் மன தைரியத்தால்  கொரோனாவை வென்றுள்ளனர். தற்பொழுதும் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் வசித்து வரக்கூடியவர் தான்  விஷ்வாஸ் சைனி. இவர் கடந்த 130 நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நீண்ட நாட்கள் இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது இவருக்கு கொரோனா தொற்றிலிருந்து விடுதலை கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், தான் நீண்ட நாட்களுக்கு பின்பதாக மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலர்  உயிரிழந்தது தனக்கு வருத்தமளிக்கவும் கூறியுள்ளார்.

ஆனால், சிகிச்சையளித்த மருத்துவர்கள் எனக்கு ஊக்கமளித்து கொண்டே இருந்ததுடன், நான் குணமடைவதில் கவனம் செலுத்தும்படி என்னிடம் கூறினார்கள். தற்போது எனக்கு முழுமையாக கொரோனா தொற்றிலிருந்து விடுதலை கிடைத்துள்ளது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal