மது வாசனை வருவதால் ஒரு நபர் குடிபோதையில் உள்ளார் என கூற முடியாது – கேரள உயர்நீதிமன்றம்!

மது வாசனை வருவதால் ஒரு நபர் குடிபோதையில் உள்ளார் என கூற முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரள உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவர் காவல் நிலையத்திற்கு அடைக்கப்பட்ட போது மது போதையில் இருந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள், மது வாசனை வருவதால் அந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவோ அல்லது மது அருந்தியதாகவோ அர்த்தமில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும், மது போதையில் கலவரம் செய்யாமல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், தனியார் இடங்களில் மது அருந்துவது குற்றமாகாது என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

author avatar
Rebekal