ஏலக்காயில் உள்ள ஏராளமான நன்மைகள்…!!!

ஏலக்காய் ஒரு சிறந்த வாசனை பொருளாகும். இது நமது சமையல்களில் பயன்படுத்த கூடிய வாசனை பொருளாகும். இது மசாலா பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏலக்காய் இந்தியா கண்டத்தில் முதலில் தோன்றியது. ஏலக்காய் பல நோய்களை குணப்படுத்துவதோடு, உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது.

ஏலக்காயில் இரண்டு விதமான ஏலக்காய்கள் உள்ளது. இதில் பச்சை மற்றும் கருப்பு என இரண்டு விதமான ஏலக்காய் உள்ளது இதில் நாம் ஏலக்காயை தான் அதிகமாக பயன்படுத்துகிறோம்.
பயன்கள் : 
ஜீரண சக்தி :
இது ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது. இது நமது உடலில் மெட்ட பாலிசத்தை அதிகரிக்க செய்து ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது.
இதய ஆரோக்கியம் :

ஏலக்காய் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், நமது உடலில் உள்ள லிப்பீட்டை அதிகரித்து, இரத்தம் காட்டாமல் தடுக்கிறது. இரத்தம் சீராக ஓட உதவி செய்கிறது.
ஆஸ்துமா :
ஏலக்காய் ஆஸ்துமாவை குணப்படுத்த கூடிய சக்தி கொண்டது. மூச்சு திணறல், இருமல் போன்றவற்றை குணப்படுத்துகிறது. இதற்கு ஏலக்காய் மிக சிறந்த மருந்தாகும்.
சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது :

உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
கிருமிகளை போக்குகிறது : 
உடலில் உள்ள கிருமிகளை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிருமிகளை முற்றிலும் அழித்து ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
விக்கலை நிறுத்துகிறது : 
ஏலக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளும் பொது விடாது தொடர்ந்து ஏற்படும் விக்கலை நிறுத்துகிறது.
கேன்சரை தடுக்கிறது :

உணவில் ஏலக்காயை சேர்த்துக்கொள்ளும் போது உடலில் உள்ள கேன்சர் கிருமிகளை அழிக்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment