நியூஸிலாந்து Vs இலங்கை அணிகள் பற்றிய ஒரு பார்வை

உலக கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் நியூஸிலாந்து Vs இலங்கை ஆகிய இரு அணிகளும் மொத உள்ளது .இப்போட்டியானது கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகிறது.

இந்த இரு அணிகளும் இதுவரை 98 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளது.அதில் நியூஸிலாந்து அணி 48 போட்டிகளிலும் , இலங்கை அணி 41 போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது .1 போட்டி டிரா ஆனாது. 8 போட்டிகளில் முடிவு இல்லை.
இதுவரை இருஅணியும் உலக கோப்பையில்10 முறை மோதி உள்ளது.அதில் நியூஸிலாந்து அணி 4 போட்டிகளிலும், இலங்கை அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது.

நியூஸிலாந்து அணி பந்து வீச்சாளர் மத்தேயு ஜேம்ஸ் ஹென்றி  இலங்கைக்கு எதிரான 7 ஒருநாள் சர்வதேச போட்டியில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 19.83 சராசரியில் உள்ளார்.இப்போட்டிகளில்  2 நான்கு மற்றும் 1 ஐந்து விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

நியூஸிலாந்து அணி பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் ஒருநாள் போட்டியில்  இன்னும் 3 விக்கெட்டை எடுத்தால் 150 விக்கெட்டை கடந்த 8-வது நியூஸிலாந்து வீரர் என்ற பெருமையை பெறுவார்.
இலங்கை வீரர்  திருமன்னே ஒருநாள் போட்டியில் இன்னும் 10 ரன்கள் எடுத்தால் 3000 ரன்களை கடந்து சாதனையை பெறுவார்.

author avatar
murugan

Leave a Comment