மே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான இறுதி சடங்குகள் நடைபெற்றுள்ளது…! – டெல்லி மாநகராட்சி

கடந்த மாதத்தில் மட்டும் 9, 374 இறுதிச்சடங்குகள் நடைபெற்றுள்ளதாகவும் டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இராண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது. அதிலும் தலைநகர் டெல்லியில், வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்தும் உள்ளனர். கடந்த மாதத்தில் மட்டும் டெல்லியில் கொரோனா நடைமுறையின்படி, அதிக எண்ணிக்கையிலான இறுதிச்சடங்குகள் நடைபெற்றுள்ளதாகவும் கடந்த மாதத்தில் மட்டும் 9, 374 இறுதிச்சடங்குகள் நடைபெற்றுள்ளதாகவும் டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இறந்தவர்கள் மட்டுமல்லாமல்,  சோதனை முடிவுகள் வருவதற்காக காத்திருந்தவர்களும்கூட இறந்துள்ளனர். அப்படி இறந்தவர்களின் குடும்பத்தார், அவருக்கு கொரோனா  இருந்ததாக கூறுகின்றனர்.

இது குறித்து ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், ஏப்ரல் கடைசி வாரம், ஏப்ரல் 24 முதல் 650 க்கும் மேற்பட்ட இறுதிச்சடங்குகள் தொடர்ச்சியாக 8 நாட்கள் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த இரண்டு மாதங்களில் பதிவான இழப்புகள் ஏப்ரல் 22 முதல் மே 7 வரை நிகழ்ந்தன. இந்த 16 நாட்களில் 18 ஆயிரத்து 480 பேருக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டுள்ளது. அதில் 9,300 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.

மூத்த சிவிக் அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம்.  ஏனென்றால், கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் வீட்டில் இருந்தவர்கள் சிலர்  உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வாரம் முதல் இதுபோன்ற இறுதிச் சடங்குகள் குறைந்து வருவதாகவும், மே 31 அன்று இந்த எண்ணிக்கை 50 ஆகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.