மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..! பள்ளிகளில் இன்று ‘தி ரெட் பலூன்’ படம் திரையிடல்…!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று ‘தி ரெட் பலூன்’  திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

அரசு பள்ளிகளில் மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் சிறாா் திரைப்படங்கள் திரையிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று ‘தி ரெட் பலூன்’  திரைப்படம் திரையிடப்பட உள்ளது.  ‘தி ரெட் பலூன்’ திரைப்படம் 1956-ஆம் ஆண்டு வெளியானது.  இப்படம் சிறுவர்களுக்கு பிடித்தமான பலூனை மையமாக வைத்து அமைந்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள கற்பனை, சுவாரசியம் குழந்தைகளுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment