பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறு.! பாஜக – காங்கிரஸார் இடையே கடும் மோதல்.!

பெங்களூருவில் அரசியல் கூட்டத்தில் பாஜக – காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. 

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதை அடுத்து அங்கு தேர்தல் வேலைகளில் பிரதான அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கர்நாடகா  அரசியல் களம் தீவிரமாக இயங்கி வருகிறது.

பாஜக கூட்டம் :

நேற்று, பாஜக சார்பில் மகளிர் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி, பெங்களூருவில் உள்ள பிஜிஎஸ் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது அந்த நிகழ்ச்சிக்கு பாஜகவினர் பேனர்கள் அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இருகட்சியினர் மோதல் :

அப்போது பாஜக – காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு கட்சியினரும் ஒருவரையொருவர் கற்களை வீசியும், கட்டையால் தாக்கி கொண்டனர் இதனால், அங்கு போலீசார் குவிக்கப்ட்டனர். பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கூட்டம் கலைக்கப்பட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment