அதிமுக வேட்பாளராக இபிஎஸ் ஆதரவு வேட்பாளர் தென்னரசு.? அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் சுற்றறிக்கை.! 

அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்,  எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசுக்கு ஆதரவாக அனைத்து மாவட்ட செயலலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில்முருகனும் அறிவிக்கப்பட்டனர். இதனால் யார் போட்டியிட உள்ளனர் என்கிற விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது.

இதில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு , இது உட்கட்சி விவகாரம். அதனால், உங்களுக்குள் பேசி, பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்து கேட்டு அவர்கள் ஆதரவுடன் யாரேனும் ஒருவரை வேட்பாளராக தேர்ந்தெடுத்து அதனை தேர்தல் ஆணையத்திடம் கூறிவிடுங்கள் என அறிவித்தனர்.

இதனை அடுத்து, தற்போது அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்,  எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசுக்கு ஆதரவாக அனைத்து மாவட்ட செயலலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அதிமுக இடைத்தேர்தல் வேட்பாளராக தென்னரசுவுக்கு ஆதரவாக முன்மொழிவு கடிதத்தில் கையொப்பமிட்டு, பெயர் மற்ற பிற விவரங்கள், கட்சி பொறுப்பு ஆகியவற்றை குறிப்பிட்டு அனுப்ப கோரி அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆதரவு கடிதங்கள் நாளை மாலைக்குள் பெறப்பட்டு, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அவர்களால், தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களாக இருக்கும் 2663 உறுப்பினர்களில் பெரும்பாலான ஆதரவு எடடபடி பழனிசாமிக்கே இருக்கும் என்பதால், ஓபிஎஸ் தரப்பு இந்த தேர்தலில் இருந்து பின்வாங்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்கிறது தமிழக அரசியல் வட்டாரம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment