நடிகர் சூர்யா நடிக்கும் ஜெய் பீம் படத்திற்கு ‘A’ சான்றிதழ்….!

நடிகர் சூர்யா நடிக்கும் ஜெய் பீம் படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் தீபாவளியை முன்னிட்டு அமேசான் இணையதளத்தில் வெளியாக உள்ளது நடிகர் சூர்யா அவர்கள் இப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காகப் போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு  உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. நேரடியாக ஓடிடி-யில்  வெளியாகும் இத்திரைப்படம் 2.44 மணி நேரம்  ஓடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.