ஃபார்முலா 4 பந்தயத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!

சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தெற்காசியாவில் முதல்முறையாக ஸ்ட்ரீட் சர்கியூட் (Street circuit) பார்முலா 4 பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது.

இதற்காக, அரசு சார்பில் 42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஃபார்முலா-4 கார் பந்தயத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்கான பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

சென்னை ரிப்பன் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!

இந்த நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

சென்னையை சேர்ந்த பாலுசாமி என்பவர் பந்தயம் நடத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் ஒப்புதல் கேட்கவில்லை என்றும், அரசு செலவில் சாகச விளையாட்டுகளை நடத்துவது சட்டவிரோதம் என்றும் அவர் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரணைக்கு எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.