ஆழ்துளை கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன்..! மீட்பு பணி தீவிரம்..!

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விதிஷா மாவட்டத்தில் லோகேஷ் அஹிர்வார் என்ற 7 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது, லேட்டரி தாலுகாவிற்கு உட்பட்ட கெர்கேடி பத்தர் கிராமத்தில் தோண்டப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.

சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை கவனித்த கிராம மக்கள் மீட்புக் குழுவிற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புத் துறையினர் சிறுவனை பாதுகாப்பாக காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்ட ஜேசிபி இயந்திரம் மூலம் குழந்தையை பத்திரமாக மீட்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும், மேலும் சிறுவனின் உடல்நிலையை கண்காணிக்க கேமரா ஒன்று ஆழ்துளை கிணற்றில் இறக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புத் துறையினர் தெரிவித்தனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment