மொபைல் விளையாட்டுக்கு தடை.! தனது உயிரை மாய்த்துக்கொண்ட 10 வயது சிறுவன்.!

மொபைல் கேம் விளையாட அனுமதிக்காததால் உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோ மாவட்டத்தில் 10 வயது பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டான். 

தற்போது இளைஞர்கள், குழந்தைகள், சிறுவர்கள் , வயது முதிர்ந்தோர் என வயது கடந்து செல்போனுக்கு பலர் அடிமையாகி வருகின்றனர். அது தற்போது மனிதனின் இன்னொரு கை போல் மாறிவிட்டது.

உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோ மாவட்டம் அருகே ஒரு 10 வயது பள்ளி மாணவன் சில நாட்களாக பள்ளிக்கு கூட செல்லாமல் வீட்டிலேயே மொபைல் கேம் விளையாடி வந்துள்ளான். இதனை அவரது அம்மா கண்டித்துள்ளார்.

நேற்று அந்த மாணவனிடம் இருந்து மொபைல் போன் வாங்கி இனி விளையாட கூடாது என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன், தனது சகோதரி அறைக்குள்ளே சென்று கதவை மூடியுள்ளான். பிறகு வெகு நேரமாகியும் கதவை திறக்கவில்லை. வீட்டில் உள்ளவர்கள் கதவை தட்டியும் திறக்கவில்லை.

இதனை அடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் அந்த மாணவன் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வழக்குப்பதிவு செய்து வீட்டாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் இறந்த துக்கத்தில் இன்னும் மாணவனின் தாயார் வாக்குமூலம் தரவில்லை என காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment