குரூப்-4: மேலும் 2,500 காலிப்பணியிடங்கள் சேர்ப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வுக்கு மேலும் 2,500 காலிப்பணியிடங்கள் சேர்ப்பு என அறிவிப்பு.

குரூப் – 4 தேர்வுக்கு மேலும் 2,500 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே, 7301 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது கூடுதலாக பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் -4 தேர்வை 15 லட்சம் பேர் எழுதினர். எனவே, இதன் முடிவுகள் ஜனவரியில் வெளியாக வாய்ப்புள்ளது. ஜூலையில் நடைபெற்ற தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணியால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment