ரூ.2,000 நோட்டுகளை மாற்ற ஆவணங்கள் தேவையில்லை – வங்கி நிர்வாகம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற ஆவணங்கள் தேவையில்லை என்று அறிவிப்பு.

கடந்த 19-ஆம் தேதி புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதுவும், இன்று முதல் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதில், தினமும் 20,000 ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம். 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற பான் கார்டு அவசியம் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்திருந்தது. இதுபோன்று, ஆவணங்கள் இன்றி 20 ஆயிரம் ரூபாய் வரையில் 10*2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என கூறப்பட்டது.

இந்த நிலையில், எவ்வித ஆவணங்களும் இன்றி ரூ.2,000 நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் என பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற, ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட எந்த ஆவணமும் தேவையில்லை, எந்த படிவமும் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்