வன்முறையை தடுக்க துணை ராணுவ படையினர் மணிப்பூர் மாநிலதிற்கு விரைந்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் இருந்தே இடஒதுக்கீடு தொடர்பாக ஒரு பிரிவினரை பழங்குடி இன பட்டியலில் சேர்க்கும் வண்ணம் மாநில உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து இரு பிரிவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன. பலர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரு பிரிவினர் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், அங்கு மீண்டும் சில இடங்களில் வன்முறை உண்டானது. இதனால், மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நியூ செக்கன் பகுதியில் உள்ள உள்ளூர் சந்தையில் இரு பிரிவினர் இடையே வன்முறை உண்டானது. இதில் தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறின.
இதனால், அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், மீண்டும் வன்முறை நிகழாமல் தடுக்க மணிப்பூருக்கு துணை ராணுவ படையினர் விரைந்துள்ளனர்.