முதலமைச்சர் கோப்பை – ம.நீ.மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு!

முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்று தமிழ்நாடு மக்கள் பயனடைய கேட்டுக்கொள்கிறேன் என கமல்ஹாசன் ட்வீட்.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – களம் நமதே என்ற பெயரில் விளையாட்டு போட்டிகளை நடத்தப்படுவதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வரவேற்பு அளித்துள்ளார். இதுதொடர்பாக வர வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – களம் நமதே!’ எனும் பெயரில் மக்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி களம் காணும் வகையில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழக மக்கள் இந்தப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று பயனடைய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். களம் நமதாகட்டும் என பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மற்றும் முதலமைச்சர் கோப்பை போட்டிகளின் தொடக்க விழா மற்றும் இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கான இலச்சினையாக நீலகிரி வரையாடை கொண்ட வடிவமைப்பு வெளியிடப்பட்டது. அதற்கு ‘வீரன்’ என்று பெயரும் வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்