எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது..பணத்தை திரும்ப கொடுங்க..போட்டோகிராபரை அலறவிட்ட பெண்.!!

பெண் ஒருவர் தனது திருமணமான 4 ஆண்டுகளுக்குப் பிறகு தான் விவாகரத்து செய்துவிட்டதாகவும்,  தனது திருமண புகைப்படக்காரரிடம் திருமணத்திற்கு புகைப்படம் எடுக்கும் போது வாங்கிய சம்பள பணத்தைத் திரும்பப் தர கூறி அந்த புகைப்படக்காரர் லான்சே ரோமியோவிடம் வாட்ஸ்-அப்பில் கேட்டுள்ளார்.

லான்சே ரோமியோ தென் ஆப்பிரிக்காவின் டர்பன் எனும் நகரில் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாகவே இவர் போட்டோ கிராபராக பணியாற்றி இருக்கிறார். சமீபத்தில் இவரிடம் பெண் ஒருவர் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டு நீங்கள் இன்னும் என்னை நினைவில் வைத்திருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. 2019ல் டர்பனில் நடந்த என் திருமணத்தில் எனக்காக போட்டோஷூட் செய்தீர்கள்.

LanceRomeoPhotography
LanceRomeoPhotography Image Source twitterLanceRomeo

தற்போது எனக்கு விவாகரத்து ஆகி விட்டது. எனவே, நீங்கள் எடுத்துக்கொடுத்த புகைப்படங்கள் அனைத்தும் வீணாகிவிட்டது.நாங்கள் உங்களுக்குச் செலுத்திய தொகையை எனக்கு திருப்பித் தர வேண்டும்” என அந்த பெண் கேட்டுள்ளார். அதற்கு லான்சே ரோமியோ “நீங்கள் ஜோக் தானே செய்கிறீர்கள்” என்று கேட்டுள்ளார்.

LanceRomeo
LanceRomeo Image Source twitterLanceRomeo

இதற்கு அந்த பெண் ” நான் விளையாடவில்லை சீரியஸ் ஆக பேசுகிறேன்” என கூற லான்சே ரோமியோ ” நீங்களும் உங்கள் கணவரும் விவாகரத்து செய்ததைக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன்.புகைப்படம் எடுத்தல் என்பது ஒருமுறை திரும்பப்பெற முடியாத சேவையாகும். என்னால் படங்களை எடுக்க முடியாததால், பணத்தைத் திருப்பித் தர முடியாது” என கூறியுள்ளார்.

இதனால் சற்று கடுப்பான அந்த பெண் ” நீங்கள் திருமணத்திற்கு புகைப்படம் எடுக்கும்போதே இந்த ஒப்பந்தைகளை கூறியிருக்கவேண்டும். இப்போது கூறினார் என்ன அர்த்தம்..? உங்கள் மேல் தான் தவறு. எனக்கு பணத்தை கேட்க உரிமை உண்டு. தயவு செய்து 70 % பணத்தையாவது திருப்பி கொடுங்கள்” என கேட்டுள்ளார்.

LanceRomeo
LanceRomeo Image Source twitterLanceRomeo

இதற்கு பதில் அளித்த லான்சே ரோமியோ ” இல்லை மேடம், பணத்தைத் திரும்பப் பெற உங்களுக்கு உரிமை இல்லை. . 4 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் பணத்தைத் திரும்பப் பெற விரும்புவது மிகவும் மோசமானது” என கூற, அதற்கு அந்த பெண் எனது வழக்கறிஞர் வழியாக பார்த்துக்கொள்கிறேன்” என கூறினார்.

அதற்கு , லான்சே ரோமியோ நான் இன்னும் கேலி செய்யப்படுகிறேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வேறு வழி இல்லை உங்கள் வழக்கறிஞரிடம் என்னை அழைக்கச் சொல்லுங்கள்” என முடித்தார். இது தொடர்பான வாட்ஸ்-அப் உரையாடல்களை லான்சே ரோமியோவே தனது சமூக வலைதளபக்கங்களில் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் சற்று நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.