2கோடி வாகனங்களை 34ஆண்டுகளில் தயாரித்து மாருதி சுசுகி சாதனை..!

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 34ஆண்டுகளில் 2கோடி வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது.

ஜப்பானின் சுசுகி மோட்டார் நிறுவனம் 1983ஆம் ஆண்டு இந்தியாவின் மாருதி உத்யோக் நிறுவனத்துடன் இணைந்து வாகன உற்பத்தியைத் தொடங்கியது. தொடக்கத்தில் மாருதி 800 வகைக் கார்களை உற்பத்தி செய்த இந்நிறுவனம் இப்போது டிசயர், பலனோ, ஆல்டோ, சுவிப்ட், வேகன்ஆர் உள்ளிட்ட 16வகை வாகனங்களைத் தயாரித்து வருகிறது.

34ஆண்டுகளில் மொத்தம் 2கோடி வாகனங்களைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது. இந்த எண்ணிக்கையில் ஆல்டோ வகைக் கார்கள் மட்டும் 31லட்சத்து எழுபதாயிரம் ஆகும். 2017-2018ஆண்டில் மொத்தம் 17லட்சத்து எண்பதாயிரம் கார்களைத் தயாரித்துள்ள மாருதி சுசுகி நிறுவனம் அவற்றில் 16லட்சத்து ஐம்பதாயிரம் வாகனங்களை இந்தியாவிலேயே விற்றுள்ளது. ஒரு லட்சத்து முப்பதாயிரம் கார்களை நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment