Today’s Live : உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரை..!

உக்ரைனுக்கு ஆதரவு :

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், போலந்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “சுதந்திரத்திற்காக வலிமையுடன் போராடும் உக்ரைனை ரஷ்யாவால் ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது. இன்னும் சுதந்திரமாகவும், தன்னம்பிக்கையுடனும் உக்ரைன் உள்ளது. அதிபர் புதின் கூறியபடி, ரஷ்யாவை தாக்கும் திட்டம் மேற்கத்திய நாடுகளிடம் இல்லை” என்று கூறினார்.

Joe Biden 1

2023-02-23 05:50 PM
எஃப்ஐஆர்களை இணைக்கக் கோரிய வழக்கு :

எஃப்ஐஆர்களை இணைக்கக் கோரிய காங்கிரஸ் தலைவர் பவன் கெராவின் மனு மீது அசாம் காவல்துறை மற்றும் உத்தர பிரதேச காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த விசாரணை தேதி வரை, மனுதாரர் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு துவாரகா நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2023-02-23 04:10 PM
வாரிஸ் பஞ்சாப் டி போராட்டம் :
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ தலைவர் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளர் லவ்ப்ரீத் தூஃபான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அஜ்னாலா காவல் நிலையத்திற்கு வெளியே ஆதரவாளர்கள் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் போலீஸ் தடுப்புகளை உடைத்தனர்.

2023-02-23 03:00 PM
புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் விடுப்பு :

சீனாவில் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் கன்சு, ஷான்சி ஆகிய மாகாணங்களில் புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மக்கள் தொகை குறைந்துள்ள நிலையில், அதை அதிகரிக்க இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

2023-02-23 01:09 PM
மேல் முறையீடு செய்வோம் ஓபிஎஸ் தரப்பு :

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். மேலும் பொதுக்குழு கூட்டியது செல்லும் என்று தான் நீதிமன்றம் கூறியிருக்கிறது, தீர்மானம் செல்லும் எனக் கூறவில்லை என்று கூறினார்.

2023-02-23 12:30 PM

உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் வெற்றி :

இபிஎஸ் தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Readmore : #Breaking : உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் வெற்றி.! அதிமுக பொதுக்குழு செல்லும்.!

2023-02-23 10:45 AM

கட்டாய மதமாற்றம் :

பாகிஸ்தானின் சிந்து பகுதியில் 17 வயதுடைய இந்து மத சிறுமியை கடத்தி இஸ்லாத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்துள்ளனர். இது குறித்து சிறுமியின் தந்தை நௌகாட் போலீசிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் மதமாற்றம் பற்றி வழக்கு பதிவு செய்யவில்லை என சிறுமியின் தந்தை குற்றச்சாட்டியுள்ளார்.

2023-02-23 10:42 AM

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment