குறைந்த விலையில் அமிர்தம்.. நமது உடலுக்கு நன்மையளிக்கும் திராட்சை..
பழங்கள் என்றாலே அதிக சத்துக்கள் நிறைந்த உணவு பொருள் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அதனின் விலையின் காரணமாக அனைவராலும் தினமும் பழங்கள் சாப்பிட முடிவதில்லை.
இப்போது அனைவருமே தினம் தோறும் நமது உடலுக்கு தேவையான சத்துக்களை பெற ஒரு சிறந்த மற்றும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய அமிர்தம் திராட்சையின் நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.
1. திராட்சையில் நீர்ச்சத்து கொஞ்சம் உண்டு. இது தவிர விட்டமின் பி, ஜிங்க், காப்பர், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன. நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த இந்த சத்துக்கள் உதவியாக இருக்கின்றன.
2. வெப்ப மண்டல பகுதியில் வாழும் நமக்கு சிறுநீரக கல் உருவாகும் சாத்தியம் அதிகம். ஆனால், திராட்சைப் பழங்களை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் உருவாகுவது தடுக்கப்படும்.
3. உடல் எடை குறித்து கவலைப்படுபவர்கள் இந்தப் பழத்தை சாப்பிடலாம். ஏனென்றல் இதில் கலோரிகள் மிக குறைவு. ஆனால், ஊட்டச்சத்துக்கள் அதிகம்.
4. வெயில் காலங்களில் எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் நம் தாகம் அடங்காது. அத்தகைய சூழலில் இனிப்பும், நீர்ச்சத்தும் கொண்ட திராட்சை பழங்களை எடுத்துக் கொண்டால் நம் தாகம் கட்டுக்குள் வரும்.
5. வெயிலின் கொடுமையினால் நம் சருமம் பாதிக்கப்படுவது குறித்த கவலை உங்களுக்கு இருக்கும். ஆனால், திராட்சைப்பழம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள விட்டமின் சி சத்து நமது சருமத்திற்கு பாதுகாப்பு தரும்.
6. பசியைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் திராட்சை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் நீண்ட நேரத்திற்கு பசியை தாங்கும் சக்தியை கொடுக்கும். ஆகவே, உடல் எடையை குறைக்க விரும்பினால் திராட்சைப் பழம் சாப்பிடலாம்.
7. இன்றைக்கு வாழ்வியல் மாற்றங்களால் அதிக அளவிலான மக்களை புற்றுநோய் பாதிக்கிறது. ஆனால், திராட்சையில் உள்ள லிமோனேன் என்ற சத்து புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதால், இதை கட்டாயம் நீங்கள் தினசரி எடுத்துக் கொள்ளலாம்.