2018 IPL லில் தடம் பதித்து சாதனை படைத்த 17வயது இளம்வீரர் சந்தீப்..!

நேபாளத்தைச் சேர்ந்த 17வயது இளம் வீரர் முதன் முதலில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று, விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

நேபாளத்தைச் சேர்ந்த 17வயது இளம்வீரர் சந்தீப் லாமிச்சானே. லெக் ஸ்பின்ரானா சந்தீப்பை டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2018- ஐபிஎல் சீசனில் ஏலத்தில் எடுத்து இருந்தது. கடந்த 10 போட்டிகளாக வாய்ப்பைப்பெறாமல் அணியில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுஇருந்த லேமிச்சானேவுக்கு நேற்றைய பெங்களூருராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

நேபாளத்தில் இருந்து ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் முதல் வீரரான லாமிச்சானே முத்திரைபதிக்கவும்தவறவில்லை. 4 ஓவர்கள் வீசிய லாமிச்சானே 25 ரன்கள் விட்டுக்கொடுத்து, பர்தீப் படேல் விக்கெட்டைவீழ்த்தினார்.

போட்டி முடிந்த பின் நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே ஊடகங்களிடம் கூறியதாவது:

நேபாளத்தில் இருந்து வந்து முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்றதைப் பெருமையாகநினைக்கிறேன். இதுபோன்ற லீக் போட்டிகள் இளம் வீரர்களின் திறமையை வளர்க்க உதவும். கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கவும், பரபரப்பாக வைத்திருக்கவும் ஐபிஎல் போன்றலீக் போட்டிகள் அவசியமாகும்.

நேபாளத்தில் என்னைப் போன்ற ஏராளமான திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், எனக்குமட்டுமே இந்த முறை வாய்ப்பு கிடைத்துள்ளது. கரீபியன் லீக்கில் நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணிக்காக இந்தஆண்டு நான் விளையாடினேன். நேபாளிகளுக்கு கிரிக்கெட் பயணம் தொடங்கி இருக்கிறது, அடுத்தடுத்துஅதிகமான வாய்ப்புகளை அவர்கள் பெறுவார்கள். நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை எப்படிக்கற்றுக்கொள்கிறோம் என்பதில்தான் வளர்ச்சி இருக்கிறது. எனக்கு இந்த ஒன்றரை மாதத்தில் ஏராளமானவிஷயங்களைக் கற்றேன்.

சிறந்த கேப்டன், அனுபவமான பயிற்சியாளர், நட்புடன் பழகிய சகவீரர்கள் என இனிய அனுபவமாகஇருந்தது. மைக்கேல் கிளார்க்கின் கிரிக்கெட் அகாடெமியில் சேர்ந்து பயிற்சி எடுத்ததால், என்னை அவர்தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

இந்தப் போட்டியில் நான் பந்துவீசிய முறை குறித்து பாராட்டுக்கள் தெரிவித்தார். எனக்குஇந்தப்போட்டியில் விளையாடியது மகிழ்ச்சி அளித்தாலும், டெல்லி அணி தோல்வி அடைந்தது சோகத்தைஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2018-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி சந்தீப் லாமிச்சனேவை ரூ.2.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment