தினமும் மாதுளை ஜூஸ் குடித்தால் கிடைக்கும் பலன்கள்!

ஒரு ஆரோக்கியமான டயட்டில் பழச்சாறுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றது.பெரும்பாலும் யாரும் காய்கறி ஜூஸ்களை குடிக்க விரும்ப மாட்டார்கள். ஆனால் பழங்களால் தயாரிக்கப்பட்ட ஜூஸ் என்றால் கட்டாயம் அனைவருமே விரும்பி குடிப்போம். அந்த வகையில் பழச்சாறுகள் ருசியாக இருக்கும். அப்படி மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு பழச்சாறு தான் மாதுளை ஜூஸ். மாதுளை அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஒரு அற்புதமான பழம். இந்த மாதுளை ஜூஸ் பல்வேறு நோய்களை குணப்படுத்தவும், தடுக்கவும் செய்யும். சமீபத்தில் மாதுளை ஜூஸ் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த ஜூஸில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள், க்ரீன் டீயை விட ஆரோக்கியமானதாக்குவதாக தெரிய வந்துள்ளது

புற்றுநோய் தடுக்கும்

மாதுளை ஜூஸில் பல்வேறு வகையான புற்றுநோய் மற்றும் கட்டிகளான, புரோஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவற்றை தடுக்கும் பண்புகள் நிறைந்துள்ளது. முக்கியமாக மாதுளை ஜூஸ் புற்றுநோய் செல்களின் உற்பத்தியை உருவாகாமல் தடுக்கிறது. பல்வேறு வகையான ஆய்வுகளில் மாதுளை ஜூஸை தொடர்ந்து ஒருவர் குடித்து வந்தால், புற்றுநோயின் அபாயம் குறைவதாக தெரிய வந்துள்ளது.

இதயத்தை பாதுகாக்கும்

இதய ஆரோக்கியத்தை மாதுளை ஜூஸ் பராமரிக்கும். இது இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். மாதுளை ஜூஸைக் குடித்து வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுப்பதோடு சரிசெய்யும்.

சருமத்தை பாதுகாக்கிறது

மாதுளை ஜூஸில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையுடனும் வைத்துக் கொள்ள உதவும். இந்த ஜூஸில் உள்ள ஆன்டி-ஏஜிங் பண்புகள், முதுமை செயல்முறையைத் தாமதப்படுத்தும். இந்த ஜூஸை ஒருவர் தினமும் குடித்து வந்தால், சரும சுருக்கம் தடுக்கப்படுவதோடு, புதிய செல்களைப் புதுப்பித்து, பல்வேறு சரும தொற்றுகள் மற்றும் நோய்களும் தடுக்கப்படும். மேலும் இது பிம்பிள், பருக்கள் மற்றும் சரும வறட்சியைத் தடுக்கும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment