எனக்கு ரஜினி போல தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – கமல்ஹாசன்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், போன்ற பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் ட்ரெய்லரும் வெளியிடபட்டது.

இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சிலம்பரசன், லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், அனிருத், பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் “சினிமாவும் எனது படங்களின் இசை வெளியீட்டு விழா 4 ஆண்டுகளுக்கு பிறகு இப்பொது தான் நடைபெறுகிறது. இந்தியாவின் அழகு பன்முகத் தன்மைதான். என் வேலை இந்தி ஒழிக என்று சொல்வது தன் வேலை கிடையாது என்றும், ஆனால் தமிழ் வாழ்க என்று சொல்வது தன் கடமை எனவும் பேசியுள்ளார்.

மேலும் பேசிய கமல் ” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் தன் நண்பர் என்றும், ரஜினிகாந்த் சினிமாவில் தன்னுடைய போட்டியாளராக இருந்துகொண்டு நண்பராகவும் இருப்பதைப் போலத்தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நட்பு பேணுவதாக” கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment