#JustNow: சட்டப்பேரவையில் ஈபிஎஸ் குற்றச்சாட்டு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி – பதில் நேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கள்ள ஓட்டு போட வந்தவரை பிடித்து கொடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்கிறது இந்த அரசு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது குறித்து கேள்வி எழுப்பினர். அதிமுகவின் போராட்டத்திற்கு அனுமதி வழங்குவதில்லை என்றும் கடந்த ஓராண்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது எனவும் பல்வேறு குற்றசாட்டிகளை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மெயின் ரோட்டில் அராஜகத்தில் ஈடுபட்டால் சட்டம் கைகட்டி வேடிக்கை பார்க்காது. சாலையில் சட்டையை கழட்டி அழைத்து வந்ததால் தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என விளக்கமளித்தார். அதிமுகவின் போராட்டத்திற்கு அனுமதிப்பதில்லை என கூறுவது, தவறான தகவல். முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டுகளுக்காகவே போராட்டம் நடந்தது. சில போராட்டங்கள் மட்டுமே மக்கள் பிரச்சனைக்காக நடந்தது என்றும் தெரிவித்தார்.

அரசின் மீதுள்ள நம்பிக்கையால் தற்போது பெண்கள் தங்களுக்கு நேரும் பாலியல் கொடுமைகள் குறித்து புகாரளிக்க துணிச்சலாக முன் வருகிறார்கள். கடந்த ஆட்சியில் பெண் காவலர் அதிகாரிகளுக்கே பாலியல் கொடுமைகள் நடந்துள்ளன என்று பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதிலளித்தார். மேலும், விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறிய ஈபிஎஸ்-க்கு, விக்னேஷ், தங்கமணி வழக்குகளில் குற்றவாளிகளை அரசு காப்பாற்றாது என்றும் முதலமைச்சர் பதிலளித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்