ஜேசன் ஹோல்டரின் காட்டடி வீணானது.., 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி ..!

ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 120 ரன்கள் எடுத்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்க இருவரும் சிறப்பான ஆட்டத்தை கொடுக்கவில்லை.

5-வது ஓவரில் கே.எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால்  அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க இவர்களை தொடர்ந்து வந்த கிறிஸ் கெய்ல் 14 ரன்களிலேயே வெளியேறினார். பின்னர் மத்தியில் இறங்கிய ஐடன் மார்க்ரம் 32 பந்துகளில் 27 ரன்கள் அடிக்க இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஹைதராபாத் அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை பறித்தார்.

126 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர், விருத்திமான் சாஹா இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் டேவிட் வார்னர் 2 ரன்னில் வெளியேற பின்னர் களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் ஒரு ரன்னில் ஷமியிடம் போல்டு ஆனார். அடுத்து இறங்கிய மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ் அடுத்தடுத்து ரவி பிஷ்னோயிடம் போல்டானார். இதனால், ஹைதராபாத் அணி 56 ரன்னில் 4 விக்கெட்டை பறிகொடுத்தது.

பின்னர், ஜேசன் ஹோல்டர், சாஹா கூட்டணியில் அணியின் எண்ணிக்கை சற்று உயர சிறப்பாக விளையாடிய சாஹா 31 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களத்தில் நின்ற ஜேசன் ஹோல்டர் சிக்ஸர்களாக அடித்து முயற்சி செய்தும் இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 120 ரன்கள் எடுத்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஜேசன் ஹோல்டர் 5 சிக்ஸர் விளாசி 47* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். பஞ்சாப் அணியில் ரவி பிஷ்னோய் 3 , முகமது ஷமி 2 விக்கெட்டை பறித்தனர்.

author avatar
murugan