தடுப்பூசி போடாத பயணிகளுக்கும் தனிமைப்படுத்தல் தேவையில்லை – அபுதாபி அரசு!

அபுதாபிக்கு செல்லக்கூடிய பயணிகள் தடுப்பூசி போட்டு இருந்தாலும், போடாவிட்டாலும் 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்தால் போதும் என அபுதாபி அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கொரோனா பரவல் அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து வரக்கூடிய மக்களுக்கு சில நாடுகள் தடை விதித்துள்ளது. மேலும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்கு சில நாடுகள் அனுமதித்தாலும், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கூட சில நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்து கொரோனா பரிசோதனை செய்து தொற்று  இல்லை என்று சான்றளிக்கப்பட்ட பின்பு தான் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், அபுதாபிக்கு செல்லக்கூடிய சர்வதேச பயணிகள் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களாக இருந்தாலும், தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் அவசியமில்லை என அபுதாபி அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அபுதாபி விமானத்தில் ஏறுவதற்கு முன்பதாக கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பயணிகளாக இருந்தாலும், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத பயணிகளாக இருந்தாலும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா எதிர்மறை சோதனை முடிவை வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

author avatar
Rebekal