90களில் கலக்கிய பல நடிகைகள் இப்போதும் பலருக்கு பேவரெட். மறைந்த ஸ்ரீதேவி போல நிறைய நாயகிகள் ரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கரகாட்டக்காரன் புகழ் கனகாவின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் என ஏகப்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
சினிமாவில் கொடிகட்டி பறந்த இவரது திருமண வாழ்க்கையில் பல சர்ச்சைகள். 2007ம் ஆண்டு முத்துக்குமார் என்ற பொறியாளர் ஒருவரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் முத்துக்குமார் என்பவர் யார் என்றே தெரியாது என்று கூறியிருந்தார்.
பல ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வரும் கனகா மிகவும் மன அழுத்தத்தில் உள்ளாராம். அண்மையில் வெளியாகிய அவரது புகைப்படங்கள் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு பார்க்கவே பரிதாபமாக உள்ளார்.