மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கும் மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட்..!

 

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாருதி சியாஸ் கார் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. தற்போது தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்த காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பது குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.

விற்பனையில் இருக்கும் மாருதி சியாஸ் காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 91.2 பிஎச்பி பவரையும், 130 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. போட்டி மிகுந்துவிட்ட நிலையில், கூடுதல் சக்திவாய்ந்த எஞ்சின் அவசியமாகி இருக்கிறது.

இதன்பொருட்டு, புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் புதிய மாருதி சியாஸ் கார் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 103.2 பிஎச்பி பவரையும், 138.4 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். தற்போதைய 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைவிட புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கூடுதலாக 12 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வர இருக்கிறது.

டீசல் மாடலிலும் 1.5 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தொடர்ந்து ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை பயன்படுத்த மாருதி முடிவு செய்திருப்பதாக அண்மைத் தகவல் தெரிவிக்கிறது. 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சசமாக 88.5 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

வழக்கம்போல் டீசல் மாடலில் ஹைப்ரிட் தொழில்நுட்ப வசதி கொடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டும் வர இருக்கிறது. டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் வருகிறது மாருதி சியாஸ் கார். மேலும், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கூடுதல் வசதிகளுடன் புதிய மாருதி சியாஸ் கார் போட்டியாளர்களை வென்று வாடிக்கையாளர் மனதில் இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment