வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னை மக்களுக்கு வாழ்த்துக்கள் – முதல்வர்!

இன்று சென்னை தினம் கொண்டாடப்படும் நிலையில், வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னை மக்களுக்கு வாழ்த்துக்கள் என முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் ஆகஸ்டு 22 ஆம் தேதி சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று முதல் ஒரு வாரத்திற்கு சென்னை மாநகராட்சியில் சென்னை தினம் கொண்டாடப்படும். இந்நிலையில் இந்த சென்னை தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை உள்ளிட்ட மாநகராட்சியின் பல கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. இன்றுடன் சென்னைக்கு 382 வயது ஆகிறது.

எனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னை மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சீர்மிகு, சிங்கார – வந்தாரை வாழவைக்கும் சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது. தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்கு பங்களித்தது திமுக அரசு, இனியும் தொடரும். சென்னை மாநகர மக்களுக்கு சென்னை தின வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal