இன்று கூடுகிறது 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடர்…!

இன்று கூடுகிறது 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, 16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, பேரவைத்தலைவர் அப்பாவு அவர்களும் ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் அனுமதி அளித்ததை தொடர்ந்து கூட்டத்தொடர் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.

இந்தகூட்டத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றுவார். அந்த உரையை பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள், தமிழில் மொழிபெயர்த்து வாசிப்பார். அதனைத் தொடர்ந்து பேரவைத் தலைவர்  மு.அப்பாவு தலைமையில் கூடி, ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சியில் , தமிழக சட்டப்பேரவையில் இந்த முறை 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.