டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது!

இன்று டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த 12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்திருந்தார். இந்நிலையில், இந்த தண்ணீர் இன்று அதிகாலை கல்லணையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று கல்லணையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி ஆர் கே பன்னீர்செல்வம், கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எஸ் எஸ் சிவசங்கர் ஆகிய அமைச்சர்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்துள்ளனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் காவிரி டெல்டா மாவட்ட கலெக்டர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் ஆகியோரும் கலந்து கொண்டு கல்லணையை திறந்து வைத்து உள்ளனர். கொரோனா காரணமாக சமூக இடைவெளிகளை கடைப்பிடித்து கல்லணை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கல்லணை நீர் திறப்பின் மூலமாக சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலப்பரப்புகள் பாசன வசதி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal