ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி செலுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், பல குழந்தைகள் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கின்றனர். இது போன்ற ஆதரவற்ற குழந்தைகளின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வைப்பு தொகையாக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், பெற்றோர்களில் யாரேனும் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் வைப்பு தொகையாக வைக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. மேலும், அவர்களுக்கு 18 வயது நிறைவடையும் பொழுது அந்த தொகை குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி செலுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக பெற்றோரை இழந்த 10 குழந்தைகளுக்கான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

author avatar
murugan