தெலுங்கானாவில் ட்ரோன் மூலமாக தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை விநியோகிக்க கைகொடுக்கும் பிளிப்கார்ட் நிறுவனம்…!

  • தெலுங்கானா அரசுடன் பிளிப்கார்ட் நிறுவனம் சேர்ந்து “மெடிசின்ஸ் ஃப்ரம் தி ஸ்கை” திட்டத்தின் கீழ் மருந்து பொருட்களை ட்ரோன் மூலமாக விநியோகம் செய்கிறது.

பிளிப்கார்ட் நிறுவனம், தெலுங்கானா அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து, “மெடிசின்ஸ் ஃப்ரம் தி ஸ்கை” திட்டத்தின் கீழ் தொலைதூர பகுதிகளுக்கு மருத்துவப் பொருட்களை, ட்ரோன் மூலமாக விநியோகங்களை மேம்படுத்துவதற்கும், நிறைவேற்றுவதற்கும் பணிபுரிய ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

இந்த கூட்டமைப்பின் ஒரு பகுதியாக , வால்மார்ட்டுக்குச் சொந்தமான பிளிப்கார்ட் ட்ரோன்கள் மூலமாக தடுப்பூசிகள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்க வழிவகை செய்கிறது. ஜியோ-மேப்பிங், ஏற்றுமதிகளை வழிநடத்துதல் மற்றும் இருப்பிடத்தின் தடமறிதல் போன்ற தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தபடுகிறது. இந்த தொழில்நுட்பத்தை பிளிப்கார்ட் உருவாக்கியுள்ளது.

இந்த தொழிநுட்பமானது, சாலை உள்கட்டமைப்பு இல்லாத மாநிலத்தின் தொலைதூர பகுதிகளில் ‘விஷுவல் லைன் ஆஃப் சைட்’ (பி.வி.எல்.ஓ.எஸ்) விநியோகங்களை செய்ய பயன்படும். மேலும், இந்த முறையானது தடுப்பூசிகளை விரைவாக வழங்குவதற்கு உகந்தது என்று பிளிப்கார்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிளிப்கார்ட் மூத்த துணைத் தலைவரும், தலைமை நிறுவன விவகார அலுவலருமான ரஜ்னீஷ் குமார் இதுகுறித்து கூறுகையில், இந்த கொரோனா நெருக்கடி காலகட்டத்தில், தொழிநுட்பங்களின் வளர்ச்சியை பயன்படுத்தி பல புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கின்றனர். அதற்கு, மெடிசின்ஸ் ஃப்ரம் தி ஸ்கை திட்டத்திலிருந்து வரும் மருந்துகள் ஒரு சான்று என்றும், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் இது ஒரு சிறந்த முறை என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.