ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? முதல்வர் நாளை ஆலோசனை..!

  • ஜூன் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் முதல்வர் நாளை ஆலோசனை.
  • மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஜூன்-7ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெற்ற நிலையில்,  மேலும், ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவர் குழு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து, ஜூன்-14-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், ஜூன் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

author avatar
murugan