இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,20,529 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 3,380ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,86,94,879 ஆக அதிகரித்துள்ளது.
- கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 1,20,529 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். கடந்த 24 ஆம் தேதி முதல் தொற்று எண்ணிக்கை 2 லட்சத்துக்கு கீழ் இறங்கியுள்ளது.
- கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,86,94,879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதில் இறப்பு எண்ணிக்கை 3,380 ஆக கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது, இதுவரை இந்தியாவில் 3,44,082 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,97,894 பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்ததோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
- இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,67,95,549 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 15,55,248 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாட்டில் இதுவரை 22,78,60,317 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.