கொரோனா தடுப்பூசி போடுங்க..! ஆனால் தடுப்பூசி சான்றிதழை வலைதளத்தில் போடாதீங்க..!

பலரும் கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி போட்டுகொண்டு அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதை விருப்பமாக கொள்கின்றனர். ஆனால், தடுப்பூசி சான்றிதழை வலைத்தளத்தில் இனி போடாதீர்கள்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு அதை புகைப்படமாக எடுத்து வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். சிலர் தான் போட்டுக்கொண்ட தடுப்பூசி சான்றிதழையும் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதை செய்திருக்கலாம். அதற்கு இனி தடுப்பூசி போட்டுக்கொண்டதை மட்டும் கூறினால் போதுமானது. உங்களின் சான்றிதழை வெளியிடாதீர்கள்.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் சைபர் டோஸ்ட் என்ற ட்விட்டர் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் வழியாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில் கொரோனா தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தியவுடன் சான்றிதழ் வழங்குவர். அந்த சான்றிதழில் உங்களது பெயர், அடையாள அட்டையின் கடைசி நான்கு எண்கள், தடுப்பூசியின் விவரம் போன்ற தகவல்கள் இருக்கும். இதை நீங்கள் வெளியிட்டால் ஆன்லைன் மோசடி செய்ய பலருக்கு வாய்ப்பு இருக்கும். அதனால் இவற்றை வெளியிடாதீர்கள் என்று இந்த ட்விட்டர் பக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதனால் இனி நீங்களும் மற்றவர்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ள கூறுங்கள், ஆனால் சான்றிதழை வெளியிட வேண்டாம்.