அதிகரிக்கும் கொரோனா பரவல்…! 12 நாடுகளில் இருந்து பயணிகள் பாகிஸ்தான் வர தடை…!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகள் இருந்து  பயணிகள் பாகிஸ்தான் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதால் மக்கள் பெருமூச்சு விட்டனர். ஆனால்  தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா அதிகரித்துள்ளதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தடுப்பூசி போட்டு இரண்டு நாட்களிலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகள் இருந்து  பயணிகள் பாகிஸ்தான் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

அதன்படி பிரேசில், போட்ஸ்வானா, கொலம்பியா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, சாம்பியா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்படுவதாகவும்,  இந்த தடை  23ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.