இந்த 5 மாநிலத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா சான்றிதழ் இருந்தால் மட்டுமே டெல்லிக்குள் அனுமதி!

கொரோனா தொற்று அதிகம் உள்ள மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் அதிகரித்துவரும் நிலையில், கொரோனா சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வரும் நிலையில், கடந்த சில மாதங்கள் தொற்றின் வீரியம் சற்று குறைந்திருந்தது. மேலும், தடுப்பூசிகள் தடுப்பு மருந்துகள் ஆகியவை பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டு இருந்த நிலையில், அவற்றுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு மக்கள் ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால், தற்போது மீண்டும் புதியதாக கொரோனாவின் தொற்று அதிக அளவில் பரவ ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று மிக அதிக அளவில் பரவி வருகிறது. இதனை அடுத்து இந்த மாநிலத்தை சேர்ந்த மக்கள் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே டெல்லிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களை சேர்ந்தவர்கள் கொரோனா சான்றிதழ் இல்லாமல் டெல்லிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரையிலும் இந்த கட்டுப்பாடு தொடரும் எனவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

author avatar
Rebekal