சீமான், சரத்குமார் எங்கள் அணிக்கு வரலாம் – கமலஹாசன்

சீமான் சரத்குமார் எங்கள் அணிக்கு வரலாம். மக்களுக்கு நல்லது நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் எங்களது அணிக்கு வரலாம்.

சென்னையை அடுத்த தாம்பரம் சாய்ராம் கல்லூரியில், கமலஹாசன் தலைமையில் மக்கள் நீதி மையம் கட்சியின் நான்காவது ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கமலஹாசன் அவர்கள், நான்  ஆரோக்கியமாக இருக்கும்போதே மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அதற்கு இன்னும் 5 வருடங்கள் உண்டு. இப்போது வயது 60 எனக்கு. சக்கர நாற்காலியில் வந்து யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

திமுக, அதிமுக உட்பட இரண்டு காட்சிகளிலும் நல்லவர்கள் உள்ளனர். அவர்கள் நல்ல பணியை செய்துவிட்டு மரியாதை இல்லாமல் உள்ளனர். அவர்களை மக்கள் நீதி மையத்தில் சேர அறைகூவல் விடுகிறேன் என்றும், நல்லவர்களுக்காக மக்கள் நீதி மையத்தின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சீமான் சரத்குமார் எங்கள் அணிக்கு வரலாம். மக்களுக்கு நல்லது நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் எங்களது அணிக்கு வரலாம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.