33 மாடி, 768 படிகள் வெறும் 30 நிமிடங்களில் சைக்கிள் மூலம் ஏறி இளைஞர் அசத்தல்..!

பொதுவாக 33 மாடிகளை ஏற எவ்வளவு நேரம் ஆகும் என்று நினைக்கிறீர்கள்..? உங்கள் கால்கள் தரையைத் தொடாமல் மிதிவண்டியைப் பயன்படுத்தி 33 மாடிகளை ஏற முடியுமா..? சாத்தியமற்றது போல் தெரிகிறது இல்லையா..? ஆனால் அந்த அதை பிரெஞ்சு சைக்கிள் ஓட்டுநரும், மலை பைக்கருமான ஆரேலியன் என்பவர் 33 மாடிகளை தனது சைக்கிள் மூலம் வெறும் 30 நிமிடங்களில் எறியுள்ளார்.

அவர் தனது சைக்கிளை 33 வது மாடி வரை எடுத்துச் சென்றார், அவர் படி ஏறும் போது ஒரு முறை கூட அவரது கால்கள் தரையைத் தொடவில்லை என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்த குறுகிய வீடியோவில் அரேலியன் தனது சவாலை முதல் தளத்தில் தொடங்குவதைக் காட்டுகிறது. பின்னர், அவரது சைக்கிள் முறுக்கு படிக்கட்டுகளில் படிகளில் மெதுவாக  ஏறி 33 வது மாடியை அடைகிறார். கடைசியாக மெட்டல் படிக்கட்டில் ஆரேலியன் சற்று சிரமப்படுவதை வீடியோ காட்டுகிறது.

இந்த மெட்டல் படிக்கட்டு செங்குத்தான மற்றும் வழுக்கும் தன்மை கொண்டது. 33 வது மாடியை அடைந்த பிறகு, ஆரேலியன் இறுதியாக தனது கால்களை தரையில் வைத்து சைக்கிளை தனது தோள்களுக்கு மேலே தூக்கிவது போல வீடியோ உள்ளது.

இதுகுறித்து ஆரேலியன் கூறுகையில், நான் உள்ளே இருக்கும்போது இது ஒருபோதும் முடிவடையாது என்று நினைத்தேன், நான் மாடிகளை ஏறினேன், அதிக வலியை உணர்ந்தேன், குறிப்பாக தோள்களில், என் காலடியில், எல்லா இடங்களிலும் வலி இருந்தது என்று அவர் கூறினார்.

author avatar
murugan