11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
புரேவி புயல் கரையை கடக்க உள்ள நிலையில், பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, இந்த 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு புரவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று இலங்கையை கடந்தது. அதனை தொடர்ந்து இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து, தமிழக கடலோர பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், கடலூர், அரியலூர், விழுப்புரம், நாமநாதபுரம், நாகப்பட்டினம், ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.