மயிலாடுதுறையில் 1200 ஆண்டுகள் பழமையான சுரங்கம் கண்டுபிடிப்பு!

Default Image

மயிலாடுதுறை அருகே உள்ள விளநகர் பகுதியில் துறைகாட்டும் வள்ளலார் கோயில் உள்ளது.

1200ஆண்டு கால பழமை வாய்ந்த இந்த கோயில் 1959ம் ஆண்டு 25வது தருமை ஆதீனத்தால் குடமுழுக்கு செய்யப்பட்ட பின்னர் தற்போது தான் மாசிலாமணி சுவாமிகள் தலைமையில் அடுத்த மாதம் 4ம்தேதி 27வது சந்நிதானம் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கோயிலின் வடபகுதியில் மழைநீர் சேமிப்பு தொட்டி கட்டுவதற்காக 10அடி குழி தோண்டிய போது மிகவும் பழமையான மெல்லிய செங்கற்களால் 4 அடிக்கு 4 அடியிலான சுவர் ஒன்றும், அதனை உடைத்த போது சுரங்கம் ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. அந்த  சுரங்கத்தின் உள்ளே 10அடி தூரத்தில் அங்கே ஒரு சுவர் தெரியவந்தது.

தஞ்சையை ஆண்ட சோழர்களின் இளம் வாரிசுகளுக்கு போர் பயிற்சி உட்பட அனைத்து பயிற்சிகளும் கோயில் வளாகத்தில் வைத்து மிகவும் ரகசியமாக நடத்திய பின்னர், அவர்களுக்கு முடிசூட்டி அவர்களை அரண்மனைக்கு அழைத்து செல்வார்கள். அதுபோன்று தான் இந்த கோவிலிலும் அரசு வாரிசுகள் தங்கியிருக்கலாம்.

மேலும், சுமார் 10அடி தூரமுடைய இந்த சுரங்கப் பாதை ஆபத்து என்று வரும்போது தப்பித்து செல்வதற்காக கட்டப்பட்டிருக்கும் என்றும் ஓய்வுபெற்ற தொல்லியல்துறை ஆய்வாளர் முத்துச்சாமி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்