வுஹானுக்கு செல்லும் “ஏர் இந்தியா” விமானம்.!

அக்டோபர் 30 ஆம் தேதி வுஹானுக்கு செல்லும் வந்தே பாரத் விமானத்தை இயக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்தியா: வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி ஏர் இந்தியா தனது விமானத்தை வுஹானுக்கு இயக்கவுள்ளது. கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் தோன்றிய மத்திய சீன நகரமான வுஹானுக்கு தற்போது பல்வேறு, கட்டுப்பாடுகளுடன் பாதுகாப்பாக இயக்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி-வுஹான் நிலையத்திலிருந்து அக்டோபர் 30 ஆம் தேதி வந்தே பாரத் மிஷன் கீழ் (விபிஎம்) விமானம் இயக்கப்படும் என்று இந்திய தூதரகம் நேற்று அறிவித்தது. மேலும், இரு நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தங்கள் இடங்களுக்குத் திரும்பிச் செல்ல ஏர் இந்தியா சீனாவுக்குச் செல்லும் ஆறாவது விமானம் இதுவாகும்.

இதற்கிடையில், ஏர் இந்தியா இதுவரை ஐந்து (விபிஎம்) விமானங்களை இயக்கியுள்ளது. இதன் மூலம், இரு நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு தங்கள் இடங்களுக்குத் திரும்பிச் செல்ல உதவுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.