இந்தியாவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் இத்தனை கோடிகள் இழப்பா?

இந்தியாவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள கோடிக்கணக்கான வருவாய் இழப்பு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நீண்டகாலம் பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால், இந்தியா மிகப்பெரிய அளவிலான வருவாய் இழப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும்,  அதன் மதிப்பு 40 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருவாய் இழப்பை தாண்டி, மாணவர்களுக்கு பள்ளி பாடத்திட்டங்களில் கணிசமான அளவில் கற்றல் இழப்புகளும் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும், தெற்காசிய நாடுகள் முழுவதும் மூடப்பட்டுள்ள பள்ளிகளால் பொருளாதார இழப்பு ரூ 46.65 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பேரிடர் காரணமாக 65 லட்சம் மாணவர்கள் பள்ளிப் படிப்பை விட்டு வெளியேறி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.