விமான பயணம் துவங்கினாலும் தென் ஆப்பிரிக்கா தங்கள் நாட்டில் இந்தியர்களை அனுமதிக்காது!

விமான பயணம் துவங்க பட்டாலும் தென்னாப்பிரிக்காவில் இந்திய பயணிகள் நுழைவதற்கு தடை விதிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது உலகம் முழுவதிலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பல இடங்களில் அரசு மக்களுக்காக ஊரடங்கை தவிர்த்து சில தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் விரைவில் சர்வதேச விமான பயணம் துவங்க தயாராக உள்ளது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று அச்சம் காரணமாக இந்தியாவில் அதிக கொரானா வைரஸ் நோயாளிகள் இருப்பதால் தென்னாப்பிரிக்காவில் இந்திய பயணிகள் நுழைவதற்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏனென்றால் அமெரிக்காவை அடுத்து பிரேசில் மற்றும் இந்தியாவில் தான் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் இருக்கிறது.
இந்நிலையில், இந்தியா மற்றும் பிரேசில் நாட்டை சேர்ந்த பயணிகளை தென்ஆப்பிரிக்காவில் சேர்க்கவும் வேண்டுமா என்று குழப்பத்தை தற்பொழுது தென்ஆப்பிரிக்க அரசாங்கம் மேற்கொள்கிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் சுகாதார அமைச்சர் ஸ்வேலி ம்கைஸ் அவர்கள், பிற அரசாங்க அமைச்சர்களுடன் ஆலோசித்து அதன் பின் தென் ஆப்பிரிக்காவில் எந்தெந்த நாடுகள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என்ற பட்டியலை தொகுத்து வெளியிடுவதாக கூறியுள்ளார். மேலும் அடுத்த வாரத்தில் இந்த பட்டியல் இறுதி செய்யப்படும் எனவும் இந்தியாவை தவிர இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இந்த பட்டியலில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
author avatar
Rebekal