சுதந்திர தினவிழாவின் சிறப்பம்சங்கள்!

சுதந்திர தினவிழாவின் சிறப்பம்சங்கள்.

இந்தியாவில் சுதந்திர தினவிழாவானது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15- தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினவிழா என்பது, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து, 1947-ம் ஆண்டு, ஆகஸ்ட்-15ம் நாள் விடுதலையானதை கொண்டாடும் வண்ணமாக ஒவ்வொரு வருடமும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில், இந்திய பிரதமர் அவர்கள், டெல்லியில் உள்ள செங்கோட்டையில், இந்திய தேசிய கோடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றுவார். மேலும், இந்த நிகழ்வின் போது, சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுவதோடு, பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.

இந்தியாவின், மாநிலத் தலைநகரிலும், மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றி, பல நலத்திட்ட உதவிகளையும் வழங்குவதுண்டு. மேலும், மாவட்ட அளவில், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பல முக்கியமான இடங்களில் கொடியேற்றப்படுவதுண்டு. அங்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர்கள், கொடியேற்றி சிறப்புரை ஆற்றுவர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.