மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பபடிவம் இணையதளத்தில் வெளியீடு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வு விண்ணப்ப படிவம் இணையதள பக்கத்தில் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்துமே மார்ச் மாதம் 24 முதலே மூடப்பட்ட நிலையில் தான் உள்ளது. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டிற்கான முதுகலைப் படிப்புக்கு நுழைவு தேர்வு எழுதுவோருக்கான விண்ணப்பபடிவங்கள் இணையதளம் மூலமாக வெளியிடப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவ மாணவியர் சேர்க்கை விண்ணப்பங்கள் பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக தொடங்கியுள்ளது. மேலும் முதுகலை பட்டப் படிப்புகள் M.Phil மற்றும் P.hd  பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் நுழைவுத் தேர்வு எழுதலாம் எனவும் அதற்கான விண்ணப்பத்தை www.mkuniversity.ac.in என்ற இணையதள முகவரி வாயிலாக மாணவர்கள் பெறலாம் எனவும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் வசந்த் அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளார்.

author avatar
Rebekal